பெரியூர் மருதகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

58பார்த்தது
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, பெரியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் தூரன் குலம் மற்றும் பண்ணை குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். மேலம் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இக்கோயிலின் குடிப்பாட்டுதாரர்கள் ஆவார்கள்
பழமை வாய்ந்த இந்த கோயில் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்பட்டதால், இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுடன், கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோயில் முன்புறம் 3 நிலைகளிகளில் ராஜகோபுரம், மூலவர் தங்க கோபுரம் மற்றும் பரிவார தொய்வங்களுக்கான கோபுரங்கள் மற்றும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் இக்கோயில் திருப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி