பள்ளிபாளையம் அடுத்துள்ள அம்மன் நகர் பகுதியில் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் மாத துவக்கத்தில், இந்த கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக இன்று கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில், விளக்கு பூஜை நிகழ்வு நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டு , சிறப்பு வழிபாடு நிகழ்வை மேற்கொண்டனர்.