கருப்பண்ணார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

51பார்த்தது
கருப்பண்ணார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம்  அல்லிநாயக்கன்பாளையத்தில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பண்ணார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆக. 19ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் (ஆக.,26) கணபதி யாகம் நடத்தப்பட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, இன்று (ஆக.,28) காலை 09: 00 மணியளவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள். ஏளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி