ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகள் தொடக்கம்

72பார்த்தது
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18. 95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.


துளசியாப்பட்டினத்தில் ஔவையாா் விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஔவையாருக்கு ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கிராமத்தினரே நடத்தி வந்த இந்த விழாவை பின்னா் ஹிந்து, இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் என அனைவரும் இணைந்து நடத்தினா். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இங்கு ஔவைக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.


இந்தநிலையில், ரூ. 18. 95 கோடியில் மணிமண்டப கட்டுமானப் பணியை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி