சட்டை நாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்

539பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருநிலை நாயகி அம்மன் சன்னதியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் செய்து உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி