திரு நடன உற்சவ திருவிழா

61பார்த்தது
திரு நடன உற்சவ திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருபதாவது ஆண்டு திரு நடன உற்சவ திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் காளி வேடம் அணிந்த பக்தர் ஒருவர் பக்தி பரவசத்துடன் நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி