ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் பேட்டி

68பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து ஊழியர் நலனுக்காகவும், மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய கொள்கைகளுக்கு எதிராகவும் தனது வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பிய இரா. முத்துசுந்தரத்தின் 7-ஆம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சங்கத்தின் மாநில செயலாளர் கோதண்டபாணி 'பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் தமிழக அரசும்- இழந்த உரிமைகளை மீட்பதற்காக போராடும் அரசு ஊழியர்களும்" என்ற தலைப்பிலும், சங்கத்தின் மாநில பொருளாளர் 'அரசு ஊழியர் சங்க வரலாற்றில் இரா. முத்துசுந்தரம்" என்ற தலைப்பிலும் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநில பொருளாளர் பாஸ்கரன் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏற்கெனவே எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்திவந்த பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி