மயிலாடுதுறையில் ரயில் மறியல் போராட்டம்

54பார்த்தது
காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. கர்நாடகாவில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடகா அரசை கண்டித்தும், ஒழுங்காற்று குழுவின் உத்தரவுப்படி உரிய தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை அருகே மாப்படுகை என்ற இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை மறித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி