மயிலாடுதுறை நகரில் திம்ம நாயக்கன் படித்துறை அருகில் பிரசித்தி பெற்ற பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையும் முன்னிட்டு பால்குட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.