மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இணையவழி குற்றங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி குற்ற மோசடி நபர்களில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். தெரியாத நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறுஞ்செய்திகள் குறித்து கேட்டறிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.