நாகை அருகே
அமமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக்குகளை அடித்து நொறுக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் சேர்ந்தவர் மோகன் காந்தி இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்த பொருட்களையும் திருடி தப்பிச்சென்று உள்ளான். தகவல் அறிந்து வந்த மோகன்காந்தி வீட்டில் பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மோகன் காந்தி திட்டச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பொருட்களை அடித்து சேதப்படுத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயங்கர ஆயுதம் கொண்டு அடித்து நொறுக்கியும் , பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது