ஒரே ஓவரில் 4,6,6,6,4,6 அதிர வைத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்

71பார்த்தது
டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 49 (27), கிஷன் 42 (23) ரன்களுடன் இன்னிங்ஸை வலுவாக தொடங்கினர். அடுத்து வந்த சூர்யகுமார் (0) டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். ஹர்திக் 39, டேவிட் 45 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் ஷெப்பர்ட் 10 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் (4,6,6,6,4,6) என விளாசி 39 ரன்கள் எடுத்து போட்டியை நிறைவு செய்தார்.

நன்றி: IndianPremierLeague

தொடர்புடைய செய்தி