மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றிக்கனியைப் பறித்து பாஜகவை கேரளாவில் காலூன்ற செய்த நடிகர் சுரேஷ் கோபி தற்போது எம்.பி., ஆகியுள்ளார். இந்த நிலையில், மக்களவைக்கு செல்லப்போகும் எம்.பி., சுரேஷ் கோபி ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களில் மட்டும் நடித்துக் கொடுக்க உள்ளதாக இன்று (ஜுன் 5) கூறியுள்ளார். திருச்சூர் மக்களவைத் தொகுதியில் அனுபவமிக்க பல வேட்பாளர்களைத் தோற்கடித்து சுரேஷ் கோபி 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார். மேலும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி சொல்வதை எப்போதும் கடைப்பிடிப்பேன் என்றார்.