முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா தனது ஜி சீரிஸில் Moto G85 என்ற பெயரில் மற்றொரு 5ஜி போனை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் 50 MP கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. Moto G85 இரண்டு வகைகளில் வெளியாகவுள்ளன. 8ஜிபி ரேம்+128ஜிபி ரூ.17,999-க்கும், 12ஜிபி ரேம்+256ஜிபி ரூ.19,999-க்கும் கிடைக்கும். இந்த போனின் விற்பனை வருகிற ஜூலை 16ஆம் தேதி மதியம் முதல் தொடங்கவுள்ளது.