பெரம்பலூர் அய்யலூரைச் சேர்ந்த ராணி (68), ராஜேஸ்வரி (28) ஆகியோர் வாயில் நுரையுடன் வீட்டில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கை விசாரித்த மருவத்தூர் போலீசார், ராணியின் மூத்த மகளான வள்ளி (35) என்பவரை விசாரித்ததில், சொத்துக்காக தாய், சகோதரியை விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. வள்ளி மீதான குற்றம் (ஜுலை 26) நிரூபிக்கப்பட்டதால் இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.