‘மோடி பொய்யான கருத்தை கூறியிருக்கிறார்’ - ப.சிதம்பரம்

64பார்த்தது
‘மோடி பொய்யான கருத்தை கூறியிருக்கிறார்’ -  ப.சிதம்பரம்
பிரதமர் மோடி கூறிய கருத்து முற்றிலும் தவறானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாக பிரதமர் மோடி பொய்யான கருத்தை கூறி இருக்கிறார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் எந்தப் பக்கத்தில் அத்தகைய வாக்குறுதி உள்ளது? பாஜக அந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி