திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகிற ஆக. 24, 25ஆம் தேதிகளில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகளை வரும் 20ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் 24, 25ஆம் தேதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்குவது, திருக்கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித இடையூறுமின்றி மின்சார விநியோகம் செய்யவும் மின்சாரத் துறையினருக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்.