அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கினார்

33451பார்த்தது
தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வந்த கார் விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை ஏந்தல் பைபாஸில் அமைச்சர் மகனின் கார் இன்று (மே 12) சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த கம்பன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி