யூடியூபை பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி

83பார்த்தது
யூடியூபை பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (30). சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்த இவர், ஊதிய பற்றாக்குறை காரணமாக வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ரூ.5 லட்சம் வரை இழந்துள்ளார். இந்நிலையில் இழந்த பணத்தை மீட்க, யூடியூபில் வங்கியில் கொள்ளையடிப்பது எப்படி என பார்த்து, நேற்று(மே 11) நள்ளிரவில் உசிலம்பட்டி to மதுரை ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி