காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் கம்பத்தில் மோதிய மினி லாரி

71பார்த்தது
காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் கம்பத்தில் மோதிய மினி லாரி
செங்கல்பட்டு: அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (29). இவர், தனியார் ஐஸ் கம்பெனியில் மினி லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த தினம் இரவு கடைகளுக்கு, ஐஸ் வினியோகம் செய்து விட்டு கம்பெனிக்கு திரும்பியுள்ளார். சித்தாமூர் அருகே சென்ற போது, இரவு 11:45 மணியளவில், காட்டுப்பன்றி சாலையின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதியது. மின்மாற்றியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி