மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக பட்டமளிப்பு விழா

67பார்த்தது
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக பட்டமளிப்பு விழா
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் (MAHER) 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது. இடைக்கால வேந்தரான நகாமதி ராதாகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி (E.N.T) ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியரும் ஆன பத்மஸ்ரீ.டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார். விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், டாக்டர். நிமல் ராகவன் சுற்றுச்சூழலுக்கான தனது அர்ப்பணிப்பு சேவைக்காக சமூகப் பொறுப்பு விருதைப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி