13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு

79பார்த்தது
13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, அரியவகை அணில்கள், பாம்பினங்கள் உள்ளன. யானைகள் அடிக்கடி வனத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் நடமாடி அவ்வழியாக கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறிப்பது வழக்கம்.

தொடர்புடைய செய்தி