கார் மோதி காற்றில் பறந்த நபர் (அதிர்ச்சி வீடியோ)

58பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் படாளம்மூடு அருகே கடந்த 20ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. குமரேசன் (62) என்பவரை மணிராஜ் (58) என்பவர் பைக்கில் தனது பண்ணையில் வேலைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சாலையை கடக்கும் போது அவர்கள் சென்ற பைக் மீது ஸ்கார்பியோ கார் மோதியது. விபத்தின் தீவிரத்தால் இருவரும் காற்றில் பறந்து கீழே விழுந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிராஜ் உயிரிழந்தார். குமரேசன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி