பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை

66பார்த்தது
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தற்போது வரை 6 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என முழங்கி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த ஒருவர் பாஜகவுக்கு 400 சீட்டு.. பாஜகவுக்கு 400 சீட்டு என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிவந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சென்ற அவர் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிவந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி