திருப்பரங்குன்றம்: ஓடையில் ஆண் சடலம் மீட்பு.

64பார்த்தது
மதுரை தென்பரங்குன்றம் பெரிய ரதவீதியை சேர்ந்த பிச்சை மணி மகன் வெங்கடேஷ் (40). இவரது மனைவி பெயர் இந்திரா ( 32). அவர்களுடைய மகன் ஹர்ஷவர்தன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வெங்கடேஷ் மனைவி பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும் கணவருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து நகைகளை அடகு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ. 17) காலை ஏற்பட்ட சண்டையில் வெங்கடேஷ் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி வந்ததாக தெரிகிறது. இன்று (நவ. 18) மாலை 4 மணி அளவில் வெங்கடேசன் உடல் மூலக்கரை அருகே ஓடையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை செய்தபோது தென்பரங் குன்றத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி