மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ( நவ. 23) கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் சஷ்டி காலங்களில் தான் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இம்முறை கார்த்திகை மாதமே சேலம் நாமக்கல் திருப்பூர் கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு பக்தர்கள் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சுற்றுலாவாக அதிகளவு பக்தர்கள் வருகை தருவதால் திருப்பரங்குன்றத்தில் பார்க்கிங் வசதி குறைந்த அளவு உள்ளதாகவும், இதனால் ஆங்காங்கே வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதாகவும் இருப்பினும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களிலிருந்து வரும் வருகை தரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்தினாலும் சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கழிப்பறை வசதிகள் குறைந்த அளவே உள்ளதாகவும் சுற்றுலா பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.