மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவிலில் அஸ்தரதேவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இன்று (அக். 2) புதன்கிழமை புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சரவண பொய்கையில் பல்லாக்கு எடுத்து வரப்பட்டு அஸ்திரதேவர் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அஸ்திரதேவருக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.