மதுரை: பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி.

61பார்த்தது
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பிரச்சனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) வருவாய்த் துறையினர் சென்ற போது அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து கிராம மக்கள் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது வருவாய்த்துறையினர் ஒரு வார அவகாசம் அளித்து சென்றனர். இந் நிலையில் கிராம மக்கள் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்ததில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி