மதுரை திருநகரில் காங்கிரஸ் எம். பி மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது
மதுரை அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் வந்தால் அரிட்டாப்பட்டியின் தமிழ் வரலாற்றையும் அழகர் கோவிலையும், பழமுதிர்ச்சோலைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
புனித ஸ்தலங்களை கூட பாஜகவினர் விட்டு வைக்காத நிலை தொடர்கிறது. வேதாந்தாவிற்கு உதவுவதற்காக கடவுளை கூட விடாதவர்களாக மோடி, பாஜகவினர் மாறியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வருகிற 25-ம் தேதி தொடங்கவிருக்கும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்போம் என்றார். தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.