நீலகிரி மாவட்டம் ஊட்டி கீழ் தலையாட்டுமந்து பகுதியைச் சேர்ந்தவர் குமார் (51). இவரும், இவரது மனைவி லதா (46), மகன் ராகுல் (23), குமாரின் தம்பி சகாதேவன் (48) ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர். ஆனால் ஏலச்சீட்டு முடிந்த பின்னரும்,பணம் கொடுத்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் பணம் கட்டி ஏமாந்த லாரி ஓட்டுநர் மோகன்குமார் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், ரூ.36 லட்சத்து 55 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.