போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர்

84பார்த்தது
மதுரை: தமிழகத்திலே போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு
இன்றைக்கு கூட 150 கோடி அளவில் போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற போது அது பறிமுதல் செய்து இருக்கிறது இதை கவலை அளிக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம்  எதிர்கால இளைஞர் சமுதாயத்தை போதை பாதையில் இருந்து மீட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருப்பது போல இந்த அரசுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை இந்த அரசு உணர்ந்து இருக்கிறதா என்பது தெரியவில்லை.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் போதை பொருள் கடத்தும் குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றும், இன்றைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா? என்று தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதைப்பொருள் பயன்பாடு மனதையும், உடலையும் மாற்றி அவர்கள் எதிர்காலத்தை சீரழித்து வருகிறது. கஞ்சா, அபின், போதை மாத்திரை வடிவிலும் இன்றைக்கு சர்வ சாதாரணமாக விற்கக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.

ஆகவே இளைஞர்களை பேரழிவுக்கு இழுத்துச் செல்லும் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி