உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியைச் சேர்ந்த சிங்கதுரை 35 இவரது மனைவி ஜெயலட்சுமி 28 முறுக்கு வியாபாரம் செய்கின்றனர்.
நேற்று திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் கோவை - நாகர்கோவில் ரயிலில் குடும்பத்தினர் உறவினர்களுடன் நாகர்கோவில் செல்ல ஜெயலட்சுமி ஏறியபோது ரயில் கிளம்பியது. இதனால் தவறி தண்டவாளத்தில் சிக்கியதில் அவரது இரு கால்களும் துண்டாகின.
காப்பாற்ற முயன்ற சிங்கதுரை இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் அங்கிருந்து கிளம்பியது இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.