அழகர்மலை மீதுள்ள முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு உற்சவர் முருகன் வள்ளி தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி ஆலய உட்பிராகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.