மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ஆயிரம் ரூபாய் காண மனுக்களை கொடுப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் மூன்று நாட்கள் நடத்துவதாக பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை நம்பி மதுரையின் பல்வேறு பகுதியிலிருந்தும் மகளிர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்து சென்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் உள்ள பாதுகாவலர்கள் இதுபோன்று முகாம் நடத்தவில்லை எனக் கூறி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த பொய்யான தகவலை தொடர்ந்து மதுரை அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மகளிர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.