பராமரிப்பற்ற சுகாதார வளாகம்

76பார்த்தது
பராமரிப்பற்ற சுகாதார வளாகம்
பராமரிப்பற்ற சுகாதார வளாகம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி ஒன்றியங்களின் 75 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கடைக்கோடி கிராமங்கள் உள்ளன.

மக்கள் திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் செயல்படாத பராமரிப்பற்ற சுகாதார வளாகங்களே. ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதார வளாகங்களை பராமரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கட்டடங்கள், கழிப்பறை கதவுகள், குழாய்கள் சேதம் அடைந்து பாழாகி வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரித்துவிட்டன. மத்திய அரசு செயல்படுத்திய துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி விட்டது.

அனைத்து ஊராட்சிகளின் சுகாதார வளாகமும் இந்நிலையில் தான் உள்ளது. இச்சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டுமென தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி