சிறைத்துறை சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள புர சடை உடைப்பு திறந்தவெளிச் சிறையில் நடைபெற்றது
இந்த திறந்தவெளி சிறை சுமார் 84 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சிறைவாசிகள் மூலமாக இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு சுற்றுச்சூழல் தினத்திலும் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெறும்
அந்த வகையில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடுவதை இந்த ஆண்டு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று 200 மரக்கன்றுகள் சிறைவாசிகள் மூலம் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மதுரை சரக சிறைத்துறை DIG திரு. பழனி. மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மரங்களை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்