மாடு முட்டி பேத்தியை பார்க்க வந்த முதியவர் படுகாயம்

59பார்த்தது
மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் சுற்றி திரிந்த மாடு முட்டி மூன்று பேர் காயம் - பேத்தியை பார்க்க வந்த முதியவர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி -

மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே சாலையில்
காரைக்குடி திருமயம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (64) என்ற முதியவர் தனது பேத்தியை பார்ப்பதற்காக வந்துவிட்டு டீ கடையில் டீ குடிக்க சென்ற போது காளைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு லெட்சுமணனை முட்டி தள்ளியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.


இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதேபோன்று மதுரையை சேர்ந்த செல்லத்தாயி(65) என்ற மூதாட்டியையும், தூய்மை பணிகளில் ஈடுபடும் ஒரு நபரையும் முட்டியது.


இதில் காயமடைந்த லெட்சுமணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் அவரது மகள் தனது தந்தையை நினைத்து கண்ணீர்மல்க கதறி அழுவது காண்போரை கலங்கவைக்கிறது.

தனது பேத்தியை பார்க்க வந்த முதியவர் மாடுமுட்டியதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இதனால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி