உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எஸ். டி. பி. ஐ. கட்சி வரவேற்பு

79பார்த்தது
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எஸ். டி. பி. ஐ. கட்சி வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை! - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எஸ். டி. பி. ஐ. கட்சி வரவேற்பு இதுதொடர்பாக எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக, பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்றும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. ஒரு யுகப் புரட்சியாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் சேர்ந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம், குறிப்பாக மெரினா புரட்சி உலகையே தமிழகத்தின் பக்கம் ஈர்த்தது. இதன் பலனாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தடையாக இருந்த ஒன்றிய அரசின் சட்டத்தை திருத்தி தமிழக அரசு புதிய அவசர சட்டத்தை இயற்றியது. மெரினாவில் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்திற்காக வெடித்த மாணவர்-இளைஞர் புரட்சி, கர்நாடகாவில் தடை செய்யப்பட்ட கம்பளாவுக்கு ஆதரவாகவும், அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்தில் தடை செய்யப்பட்ட பாரம்பரிய எருது போட்டிக்காகவும் துளிர்விட தொடங்கியது என்பது வரலாறாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான், தமிழர் தம் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இனி தடையில்லை என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இதற்காக நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் மிகச்சிறப்பாக பங்காற்றிய தமிழக அரசின் வழக்கறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும், போராட்டங்களின் மூலம் சாதித்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எஸ். டி. பி. ஐ. கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி