தாம்பரம் - கொச்சுவேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில்

61பார்த்தது
தாம்பரம் - கொச்சுவேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக். 11, 18, 25, செப்டம்பர் 1, 8, 15, 22, 29, டிசம்பர். 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07. 30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11. 30 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06154) அக். 13, 20, 27, செப்டம்பர் 3, 10, 17, 24 டிசம்பர். 1, 8, 15, 22, 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03. 25பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07. 35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்களில் 14 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என்றும் இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி