காா்கில் போா் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி அஞ்சலி
மதுரை சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து, பிரதமரின் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மதுரை மாநகராட்சி பொன்முடியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களுக்கு மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.