சாலையில் தேங்கியுள்ள மழை நீர்- வாகன ஓட்டிகள் அவதி!!

62பார்த்தது
மதுரை வைகை ஆற்றின் கரையோர சாலையில் தேங்கியுள்ள மழை நீர்- வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்தொடர் கன மழையின் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்த நிலையில் ஆரப்பாளையத்தில் இருந்து செல்லூர் செல்லக்கூடிய வைகைக் கரையோர சாலை பகுதியில் இடதுபுறம் குரு தியேட்டரில் இருந்து வைகை ஆற்றுக்கு வரும் பகுதியில் தண்ணீர் குழம்பு தேங்கியுள்ளதால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அவ்வப்போது வாகனங்கள் பழுதாகி பாதி வழி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெருமளவு சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போதும் கனமழை பெய்யும் போது அவ்வபோது இந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் ஆகிய இந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி