முனிச்சாலையில் போலீஸ் கொடி அணிவகுப்பு.

58பார்த்தது
முனிச்சாலையில் போலீஸ் கொடி அணிவகுப்பு.
மதுரையில் முனிச்சாலை பகுதியில் இன்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரை நடைபெற்றது.

இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக ஆணையர் , காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி