கண் மருத்துவமனையில் ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டம்

62பார்த்தது
மேற்குவங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புறவு செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்திந்திய மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இன்று வெளி நோயாளிகளுக்கு கண் பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெறாது என மருத்துவமனையின் இரண்டு வாசல்களிலும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இதனை அறியாமல் வரக்கூடிய நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 புற நோயாளிகள் வரக்கூடிய இந்த மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நோயாளிகள் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.

இன்று ஒரு நாள் முழுவதும் புற நோயாளிகள் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி