மதுரை: சுங்கச்சாவடி பேச்சு வார்த்தைக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, சுங்கச்சாவடி தொடர்பான நடைபெற்ற பேச்சு வார்த்தை 100% சதவிகிதம் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். மேலும் ஏற்கனவே 2020 முதல் 23 வரை செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, அது செலுத்த தேவையில்லை என தெரிவித்த அமைச்சர், 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் உள்ளன என கேள்விக்கு, அதெல்லாம் இருக்கு இருக்கு என கூறியபடியே கிளம்பினார். மேலும் திருமங்கலம் பகுதி மக்களுக்கு கட்டண விளக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு உள்ளதா என கேள்விக்கு, அதெல்லாம் தலைமையில பேசிட்டு இருக்காங்க அது ரிட்டனா முடிவாகிடும் என தெரிவித்து விட்டு சென்றார்.