மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகள் இணையும் இடமான கல்லாங்காடு பகுதியில் சுமார் 420 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் நில அளவீடு பணியும் நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சிப்காட் அமைந்தால் அந்த பகுதியில் உள்ள வழிபாட்டுத் தளங்கள், 500 ஏக்கர் விவசாயம், 20-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு சார்பில் அமைய உள்ள சிப்காட் பணியினை துரித படுத்தக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசினை வலியுறுத்தி பூதமங்களம், கொடுக்கம்பட்டி ஆகிய கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூதமங்கலத்தைச் சேர்ந்த சசிக்குமார், "
சிப்காட் அமையுள்ள இடம் கடைமடை பகுதி என்பதால் 5 வருடத்திற்கு ஒரு முறை தான் விவசாயம் செய்ய இயலும். விவசாயம் பெருமளவில் இல்லாத காரணத்தினால் இங்குள்ள கிராம மக்கள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள். 99 சதவீத மக்கள் வர வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த அரசு பணியை துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.