மதுரை ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி ; எம் பி ஆய்வு

61பார்த்தது
மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 347 கோடியில் செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதுரை எம் பி சு வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

ரயில்வே மறு சீரமைப்பு பணிகள் திட்டமிடபட்ட காலத்தில் முடுவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரையில் 28% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

தொடர்ந்து மத்திய அரசுக்கு ரயில் நிலைய மேம்படுத்த வலியுறுத்தியதால் மதுரை ரயில் நிலையம் 347 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் நிறைவுக்கு பின்னர் மிக அழகான ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் இருக்கும், நாள் ஒன்றுக்குள் 1லட்சம் பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில், ரயில் நிலையத்தில் நான்கு மடங்கு விரிவாக்கம் கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் ஓய்வு அறை, 30 சதவீதம் குளிர்சாதன வசதி இல்லாத பயணிகள் ஓய்வு அறை,

முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்க கூடாது, ஏற்கனவே இருந்த அளவை விட எட்டு மடங்கு பெரிய இரு சக்கர வாகனம் பாதுகாப்பு மையம், 34 மின் தூக்கிகள் புதிதக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தில் இடம் பெற உள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி