விஜய் மற்றும் அவரது மாநாடு குறித்து செல்லூர் ராஜூ பேட்டி

50பார்த்தது
பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்.

இதனையடுத்து அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு கூறுகையில்,

"விஜய்யின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாடு தொடக்கம் நன்றாக உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

குழந்தை பிறந்து அம்மா என அழைப்பது போல விஜய் மாநாடு நடைபெற்றுள்ளது. எப்படி இருக்கு என போக போக பார்ப்போம். நடிகர் கமல் மாதிரி இல்லாமல் விஜய் மாநாட்டில் நன்றாக மிக தெளிவாக பேசினார்.

திராவிட மாடல் ஆட்சி என்பதே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பணம் கொடுத்து, விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியில் உள்ளவர்கள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என குரல் எழுப்பி வருகிறார்கள்.

திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை. திமுகவின் இளைஞர் பட்டாளம் விஜய் கட்சிக்கு வந்ததால் திமுகவினர் குத்துதே!!! குடையுதே!!! என பேசி வருகிறார்கள்" என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி