சோழவந்தான்: விஷம் அருந்தி கல்லூரி மாணவி தற்கொலை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணபுரம் புது தெருவை சேர்ந்த சந்திரனின் மகள் சத்திய பிரியங்கா (17)என்பவர் மதுரையில் உள்ள மங்கையர்கரசி கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி காலையிலிருந்து செல்போனையே பார்த்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். பிறகு 8 மணியளவில் பெற்றோர்கள் தோட்ட வேலைக்கு சென்றவுடன் மீண்டும் 10 மணிக்கு வீடுக்கு திரும்பி வந்து பார்த்த போது மகள் சத்திய பிரியங்கா விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சோழவந்தான் ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி அளித்த பின்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி நேற்று முன்தினம் (நவ. 3) இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.