வாடிப்பட்டி: குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

58பார்த்தது
வாடிப்பட்டி: குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில்,150 குழாய் இணைப்புகள் உள்ளது 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலைத் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இதில், ஒரு மோட்டார் கடந்த 20 நாட்களுக்கு முன் பழுதாகி விட்டது. அதனால், ஒரு மோட்டார் மூலம் தினந்தோறும் காலை 9 மணிக்கு மேல் குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் மேட்டுப் பகுதியில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. அதனால் முறையாக மோட்டார் பழுதை சரி பார்க்க கோரி நேற்று (நவ. 23) காலை பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் போராட்டகாரரர்களிடம் பேசி உடனடியாக சரிசெய்யப்படும் என்று கூறியதால் சமாதானம் அடைந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி