மதுரை திருப்பரங்குன்றம் மேலக்குயில்குடி மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த மேலக்குயில்குடியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மையம் உள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு 12 மாணவிகள் பிகாம் படிப்பதற்கான விண்ணப்பித்து படித்து வந்தனர்.
தற்போது 12 மாணவிகளும் பிகாம் படித்து முடித்த நிலையில் நாங்கள் வேறு வேலைக்கு செல்ல இருப்பதால் எங்களுக்கு டிசி மற்றும் படித்த சான்றிதழை தருமாறு கேட்டனர்.
ஆனால் அதற்கு மதர் தெரசா பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பாக மேலும் மணவர்கள் இரண்டு ஆண்டுகள் எம் காம் படிக்க வேண்டும் படித்தால் மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும் என கூறியதால் பி காம் முடித்த 9 மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று மதர் தெரசா பல்கலைக்கழக மையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து வந்த இயக்குனர் புஷ்பராணி மாணவிகளை சமாதானப்படுத்தி நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருப்பேன் எனக்கூறி மாணவிகளை அழைத்து அவர்களிடம் சான்றிதழ் வழங்கும் கோரிக்கை மனுவை பெற்று இன்னும் சில தினங்களில் வழங்குவதாக கூறினார்.
இதனால் பி காம் படித்து முடித்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கடிதத்தை எழுதி கொடுத்துள்ளார்கள்.